About Us

Sri Yoga Navarathnalaya

Sri Yoga Navarathnalaya

ஸ்ரீ யோக நவரத்ன குபேரன்

ஒரு மனிதன் வாழ்வதற்கு பொருளாதார மேம்பாடு அவசியம்.

பொருளாதாரம் மேம்பாடு என்பது பல விதமான அளவுகோலை சார்ந்து இருக்கிறது .

ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும் ,
இரண்டு லட்சம் ரூபாய் செலவு வந்தால் அந்த வருமானம் போதாத நிலை தான்…

10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் ,
5 ஆயிரம் ரூபாய்க்குள் செலவுகள் இருந்தால் அந்த வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் .

ஆகவே நாம் தேடும் செல்வத்தில், செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் .

அப்படி செலவுகள் இருந்தால் சுப செலவுகளாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து விரயச் செலவுகளாக இருந்தால் வாழ்க்கை மிகவும் சோதனையாக மாறி விடும் .

அந்த விரயச்செலவுகள் வராது தடுக்க குபேரன் ஆசி அவசியம்…

ஆகவே ஒரு லட்சம் ரூபாய் நமக்கு வருமானம் வரும் பொழுது,
25 ஆயிரம் ரூபாய்க்குள் நமது தேவைகள் முடிந்துவிட வேண்டும்.

ஆகவே ,
ஒரு மனிதனுக்கு நிம்மதியான வாழ்க்கை தேவை என்றால் ,
அவனது வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற அமைப்பு இருக்க வேண்டும்…

நிம்மதி என்ற ஒன்று தான் மனிதனை,
மனநோயிலிருந்து,
உடல் நோயிலிருந்து பாதுகாக்கிறது .

நிம்மதியின்மை ஒரு குடும்பத்தை முழுவதுமாக பாதிக்கிறது.

சக மனிதர்களை நாம் பார்க்கும் பொழுது ,
பெரும்பாலானோர் நிம்மதியின்றி தான் இருப்பார்கள் .

ஆனால் சில மனிதர்கள் மட்டும் மிகவும் நிம்மதியாக இருப்பார்கள்

வருமானம் வருகிறதோ, இல்லையோ ஆனால் அவர்கள் மிகவும் செல்வச்செழிப்போடு, உலகில் வாழ்வதற்கு கொடுத்து வைத்தவர்கள் போலவும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

அவர்களது குடும்பமும், தொடர்ச்சியாக ,
மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும் …

மற்றவர்களுக்கு அவர்கள் எந்த வகையிலும் தொல்லை கொடுக்க மாட்டார்கள் .

தான் உண்டு , தன் வேலை உண்டு என்று எந்த நேரமும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்…

மற்றவர்கள் இவர்களை கண்டு வியந்து ,
அவர்களின் ரகசியத்தை காண முற்பட்டாலும் ,முடியாது…

அப்படிப்பட்ட மிகச் சிறந்த வாழ்க்கையை ,
வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் .

இத்தகைய மகிழ்ச்சியான சூழ்நிலை அவர்களுக்கு வருவதற்கு காரணம்…

குபேர சந்தானம் அவர்களுக்கு அதிகமாக இருப்பதே.

அவர்களது வீட்டில் லட்சுமி குடியிருப்பாள் .

லக்ஷ்மி குபேரன் குடியிருப்பார்கள்..

ஆகவே நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் .

நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நாம் மட்டுமே காரணம் அல்ல…

இறைவனின் சக்தியான “நவரத்ன குபேரனின் ஆசீர்வாதம்” நமக்கு அவசியம் தேவை.

குபேரனின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே ,
லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்கும் .

ஆகவே வாழ்வில் முன்னேற நினைப்பவர்கள் ,
என்றும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புபவர்கள்,
தன்னுடைய குடும்பத்தார் அனைவரும் மிகச்சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அனைவரும்,
ஸ்ரீ யோக நவரத்ன குபேரன் தலத்திற்கு வந்து ,
தங்களுடைய ஆசீர்வாதத்தை பெற்றுச் செல்லுங்கள்.

நீங்கள் வந்து ஆசீர்வாதத்தை பெற்று சென்ற,
ஒன்பதாவது நாளில் இருந்து உங்களது வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் தெரியத் தொடங்கும்…

இந்த மாற்றங்கள் உங்களது வாழ்க்கையில் நீடித்து இருக்க வேண்டும் என்றால் ,
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம்
ஸ்ரீ யோக நவரத்ன நவரத்ன குபேரன் தலத்திற்கு வந்து உங்களது குபேர சக்தியை மேம்படுத்திக் கொள்ளுங்கள் .

இந்த இயற்கை சக்தி ,
உங்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கையை கொடுக்கும்.

நோயற்ற வாழ்க்கையும் ,
மனதில் சஞ்சலமற்ற எண்ணங்களையும் தீர்த்து மகிழ்ச்சி நிலவும்..

கடன் சுமை குறையும் .

பண வரவுகளையும் ,
முடிக்க முடியாத பிரச்சனைகளையும் ,
நிம்மதி இல்லாத வாழ்க்கையையும் சரிப்படுத்திக் கொடுக்கும் .

உங்கள் வாழ்க்கையில் 6 மணி நேரம் நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டும் என்றால் ,
ஸ்ரீ யோக நவரத்ன குபேரன் தலத்திற்கு வாருங்கள்…

வந்து பாருங்கள் …

மகிழ்ச்சியை எத்தனை கிலோ வேண்டுமானாலும் வாங்கிச் செல்லுங்கள் ..

மகிழ்ச்சியாக இருங்கள்…

உங்களுக்கு நல்லது நடந்தால், மற்றவர்களுக்கும் ஸ்ரீ யோக நவரத்தின குபேரன் தலத்திற்கு சென்று வழிபடுவதற்கு உதவி புரியுங்கள் …

உங்களால் அவர்களும் முன்னேற்றம் அடையட்டும்.

நம்மைச் சார்ந்த மக்கள் அனைவரும் குபேரன் ஆசியோடு வளர்ந்து ,
இந்த பூமி குபேர பூமியாக மலரட்டும் .

மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கட்டும்.

கடன் என்பதே ஒருவருக்கும் இல்லாது போகட்டும் .

வீட்டில் லக்ஷ்மி குபேரன் 24 மணி நேரமும் தங்குவதற்கு, ஸ்ரீயோக நவரத்ன குபேரன் தலத்திற்கு வாருங்கள் .

உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகட்டும்,
உங்களால் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி பரவட்டும் .

தான் மட்டுமே வளர்ந்து விட்டால் , ஏழ்மையான நிலையில் இருப்பவர்கள் ஏக்கம் நம்மை சும்மா விடாது…

நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கும் ,
மகிழ்ச்சி அடைய வழிகாட்டி விட்டால் ,
நமது மகிழ்ச்சிக்கு கேடு வராது..

இந்த உலகம் போட்டி ,
பொறாமை நிறைந்த சூழலால்தான் அல்லல் படுகிறது…

அவைகள் தீய சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் மனித மனதை மயக்கும்…

அந்த மாயா சக்தியை அழித்து, குபேர சக்தியை அதிகரிக்க வேண்டும் எனில் ,
நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பிறருக்கும் தர வேண்டும்.

ஒருவருக்கு நாம் பொன்னோ, பொருளோ தர முடியாது…

ஆனால் இங்கே செல்லுங்கள் உங்கள் பிரச்சினை தீரும் என்று சொல்லி ,
அவர்களுக்கு வழிகாட்டி விடுவது சிரமம் இல்லையே…!

இவ்வளவு காலம் வனத்தில் இருந்து வந்த குபேரன் ,
தற்போது எங்கள் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ,
மக்கள் குறை தீர்க்க ,
ஶ்ரீ யோக நவரத்னாலயாவில், ஶ்ரீயோக நவரத்ன குபேரன் ஆசி புரிந்து அருள் பாலிக்கிறார்…

கலியுகத்தில் மக்கள் சிரமப்பட்டு வாழ வேண்டும் என்பது விதி…

மக்கள் படும் அவஸ்தையை காண சகிக்க முடியாத அளவுக்கு இருப்பதை இறைவன் அறிந்து, குபேரனை மக்கள் குறை தீர்க்க இங்கே அனுப்பி உள்ளார்…

கனி தரும் மௌன சித்தர் மூலம் மாபெரும் செல்வ வரம் தரும் மகத்துவங்கள் அவரது தவத்தின் வாயிலாக இங்கே அமைந்துள்ளது.

வழிபடும் மக்களுக்கு ,
அனைத்து செல்வமும் உடனடியாக வரவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

இங்கே தியானம் செய்து இருக்கும் வன தெய்வ மரங்களை வழிபட்டு,
வன மாதாவின் வாரிசுகளான கோமாதாவை வணங்கி,
ஶ்ரீ யோக நவரத்ன குபேரன் ஆசி பெற்று செல்லுங்கள்…

இந்த பூமியே குபேரபுரி ஆகட்டும்.

“ஸ்ரீ யோக நவரத்ன குபேரன்” வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

“ஸ்ரீ யோக நவரத்ன கோசாலை” வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

“ஸ்ரீ யோக நவரத்னாலயா ” வரும் அனைவரும் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!